தெலுங்கு தி கிரேட் இந்தியன் கிச்சன் : ஓடிடியில் நேரடி வெளியீடு
நவ 25, 2026
Advertisement
ஜியோ பேபி இயக்கத்தில், "ஜெயிலர் 2" படத்தில் வில்லனாக நடித்த சுராஜ் வெஞ்சாரமூடு, நிமிஷா சஜயன் நடிப்பில் 2021ல் இணையத்தில் நேரடியாக வெளியான மலையாளப் படம் "தி கிரேட் இந்தியன் கிச்சன்".
ஒரு பெண் திருமணமாகி புகுந்த வீட்டில் எப்படியான சிரமங்களை எதிர்கொள்கிறார். அவளது கனவுகளைத் தியாகம் செய்து மனைவியாகவும், மருமகளாகவும் வாழ்பவர், ஒரு கட்டத்தில் புகுந்த வீட்டை உதறித் தள்ளி தனது கனவை நோக்கிப் பயணிப்பதுதான் இந்தப் படத்தின் கதை.
இணையத்தில் வெளியானாலும் அதிக வரவேற்பையும், பல கருத்துப் பரிமாற்றங்களையும் ஏற்படுத்திய படமாக இருந்தது. இப்படத்தைத் தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க ரீமேக் செய்து 2023ல் வெளியிட்டார்கள். ஆனால், இங்கு வரவேற்பைப் பெறவில்லை.
அடுத்து சான்யா மல்கோத்ரா நடிக்க ஹிந்தியில் ரீமேக் செய்து "மிஸஸ்" என்ற பெயரில் கடந்த வருடம் ஓடிடியில் நேரடியாக வெளியிட்டார்கள். வெளியான சில நாட்களிலேயே படம் சிறப்பான வரவேற்பைப் பெற்றதாக ஓடிடி நிறுவனம் அறிவித்தது.
இப்படத்தைத் தற்போது தெலுங்கில் "ஸ்ரீமதி" என்ற பெயரில் நிவேதா தாமஸ் நடிக்கத் தயாரித்துள்ளார்கள். டிசம்பர் 4ல் ஜீ 5 தெலுங்கு ஓடிடி தளத்தில் இப்படம் நேரடியாக வெளியிட உள்ளார்கள். படத்தின் டீசரும் வெளியாகி உள்ளது.
மலையாளம், ஹிந்தியில் வரவேற்பைப் பெற்று தமிழில் வரவேற்பைப் பெறாத இப்படம் தெலுங்கில் எப்படியான வரவேற்பைப் பெறப் போகிறது என்பதைப் பார்க்க பத்து நாட்கள் காத்திருக்க வேண்டும்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…