வீரம் படத்திற்கு பிறகு இணையும் வெற்றி கூட்டணி!
ஜன 19, 2024
Advertisement
நடிகர் அஜித் குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் "விடாமுயற்சி" என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் தனது 63வது படத்தில் நடிக்கவுள்ளார். இதனை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்தில் இசையமைப்பாளராக தேவிஸ்ரீ பிரசாத் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2014ல் அஜித் நடித்த "வீரம்" படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இப்போது இந்த வெற்றி கூட்டணி 10 வருடங்கள் கழித்து மீண்டும் இணைகிறது என்கிறார்கள்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…