
கேப்ரில்லாவை தொடர்ந்து ஆஜித்திற்கும் கொரோனா
மே 11, 2021
Advertisement
சில ஆண்டுகளுக்கு முன் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் பிரபலமானவர் ஆஜித். அதன்பின் கடந்தாண்டு பிக்பாஸ் 4 நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். தற்போது நடன நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார். சில தினங்களுக்கு முன் இந்த நிகழ்ச்சியில் இவருடன் இணைந்து ஆடிய கேப்ரில்லா கொரோனா தொற்றுக்கு ஆளானார். இப்போது ஆஜித்தும் இந்நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளார்.
இதுப்பற்றி, ‛‛எந்த அறிகுறியும் இன்றி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் நலமாக உள்ளேன். உங்களின் பிரார்த்தனைக்கு நன்றி. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்"" என சமூகவலைளத்தில் பதிவிட்டுள்ளார் ஆஜித்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!