
அதர்வாவுக்கு ஜோடியாகும் அதிதி ஷங்கர்
மார் 01, 2024
கார்த்தி நடித்த விருமன், சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் போன்ற படங்களில் நடித்தவர் அதிதி ஷங்கர். தற்போது விஷ்ணுவர்ஷன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து ராஜேஷ்.எம் இயக்கும் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார் அதிதி ஷங்கர். தற்போது ஜெயம் ரவி நடிப்பில் பிரதர் என்ற படத்தை இயக்கி வரும் ராஜேஷ் அந்த படத்தை முடித்ததும் அதர்வா -அதிதி ஷங்கர் இணையும் படத்தை இயக்கப் போகிறார். இந்த படம் ஏற்கனவே அவர் இயக்கிய சிவா மனசுல சக்தி படம் போன்று ரொமான்ஸ் கலந்த காமெடி கதையில் உருவாகிறது. இப்படத்தை ஸ்ரீ வாரி பிலிம்ஸ் தயாரிக்கிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!