அயோத்தியில் ஆதி புருஷ் டீசர் வெளியீடு
செப் 27, 2022
"பாகுபலி" படத்தின் மூலம் பான் இந்தியா நடிகர் எனப் பெயரெடுத்தவர் தெலுங்கு நடிகரான பிரபாஸ். அதற்குப் பிறகு அவர் நடித்த "சாஹோ, ராதே ஷ்யாம்" படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இருந்தாலும், அவருக்கு பிரம்மாண்டமான படங்களில் நடிக்கும் வாய்ப்பு தொடர்ந்து கிடைத்தது.
தற்போது "ஆதி புருஷ், சலார், புராஜக்ட் கே" ஆகிய பிரம்மாண்ட பான் இந்தியா படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் "ஆதி புருஷ்" படம் ராமாயணக் கதையாக உருவாகி வருகிறது. ஓம் ராவத் இயக்கும் இப்படத்தில் ராமர் ஆக பிரபாஸ், சீதை ஆக கிரித்தி சனோன், ராவணனாக சைப் அலிகான் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் முதல் டீசர் வரும் அக்டோபர் 2ம் தேதியன்று ராமர் பிறந்த இடமான அயோத்தியில் வெளியிடப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 2023 ஜனவரி 12ம் தேதி இப்படம் வெளியாகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!