
திருப்பதியில் இந்தியன் 2 படப்பிடிப்பு : ஏழுமலையானை தரிசித்த காஜல்
அடுத்து இப்போது திருப்பதியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அது பற்றிய தகவலை படத்தின் கதாநாயகியான காஜல் அகர்வால் வெளியிட்டுள்ளார். நேற்று கணவருடன் திருப்பதியில் வெங்கடாஜலபதியை தரிசனம் செய்யச் சென்றிருந்தார் காஜல். அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், “கணவருடன் சேர்ந்து முதல் முறையாக திருப்பதி வந்துள்ளேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்தியன் 2 படப்பிடிப்பிற்காக திருப்பதிக்கு வந்திருக்கிறேன்,” என்று தெரிவித்தார்.
அவருடன் செல்பி எடுக்க சில ரசிகர்கள் ஆசைப்பட்டனர். அவர்களுடன் பொறுமையாக புகைப்படம் எடுத்துக் கொண்டார் காஜல்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!