அஜித் மச்சினி பிறந்தநாள் கொண்டாட்டம்
ஜூலை 20, 2021
Advertisement
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் மனைவியும் நடிகையுமான ஷாலினிக்கு ரிச்சர்ட் என்ற அண்ணனும், ஷாமிலி என்ற தங்கையும் உள்ளனர். ஷாலினியைப் போன்று ஷாமிலியும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான "அஞ்சலி" படத்தில் அறிமுகமாகமாகி ரசிகர்கள் மனதையும் கவர்ந்தவர். தமிழ், மலையாளம், தெலுங்கு என பல படங்களில் ஷாமிலி நடித்துள்ளார். விருதுகளும் பெற்றுள்ளார்.
கதாநாயகியாக சில படங்களில் நடித்தவர் அதன்பின் வாய்ப்புகள் இல்லாததால் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். இந்நிலையில் நடிகை ஷாமிலி, தனது அக்கா ஷாலினியுடன் இணைந்து வீட்டில் எளிமையான முறையில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இந்த கொண்டாட்டத்தின்போது ஷாமிலியின் சகோதரர் ரிச்சர்ட் உடனிருந்தார். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…