திருமாவளவனை மறைமுகமாக விமர்சித்த நடிகை சனம் ஷெட்டி
மே 09, 2026
Advertisement
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சி அமைக்க இன்னும் இரண்டு எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. அந்த இரண்டு எம்எல்ஏக்களை விசிக தலைவர் திருமாவளவன் கொடுத்து ஆதரவு தெரிவிப்பாரா என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துவிடும்.
இதனிடையே, விஜய் பதவியேற்க தாமதம் ஆவதைத் தொடர்ந்து நடிகை சனம் ஷெட்டி சமூக வலைத்தளத்தில், "இந்த ஒரு சீட், ரெண்டு சீட் வச்சவங்க பண்ற அட்ராசிட்டி இருக்கே" எனப் பதிவிட்டிருந்தார். அதற்கு ஒரு ரசிகர் "அதுவும் மக்கள் தீர்ப்புதானே, அதை எளிதில் எடுத்துக் கொள்ள வேண்டாம்,” என்று கமெண்ட் செய்திருந்தார்.
அதற்கு பதிலளித்த சனம் ஷெட்டி, “மக்கள் தீர்ப்பு என்பது எம்எல்ஏ சீட்டிற்குத்தானே, துணை முதல்வர் பதவிக்கு இல்லையே,” எனத் தெரிவித்துள்ளார்.
விசிக சார்பில் துணை முதல்வர் பதவி கேட்பதாக செய்திகள் பரவி வரும் நிலையில், அக்கட்சியின் தலைவர் திருமாவளவனை மறைமுகமாக விமர்சித்துள்ளார் சனம் ஷெட்டி.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!