படித்தது நர்சிங், செய்வது ஆக்டிங்: அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் சாய் ரோஹினி
ஏப் 10, 2023
Advertisement
வேலூரை சேர்ந்தவர் சாய் ரோஹினி. சென்னையில் நர்சிங் படித்த இவர் தற்போது நடிகையாகிவிட்டார். நடிப்புக்கான அவரது தேடலில் முதலில் வாய்ப்பு கிடைத்த படம் "நாட் ரீச்சபிள்". அதன்பிறகு துச்சாதனன், மிடில் கிளாஸ் படங்களின் வாய்ப்பு கிடைத்தது அதில் நடித்து வருகிறார்.
நடிக்க வந்தது பற்றி சாய் ரோஹினி கூறியதாவது: சினிமாவில் எனக்கு என்று தெரிந்தவர் யாருமில்லை. எனக்கு எந்த சினிமா பின்னணியும் கிடையாது. எனக்கு சினிமாவின் மீது ஒரு ஈர்ப்பு வந்தது. பெற்றவர்களின் விருப்பத்திற்காக நர்சிங் படித்தேன். ஆனாலும் சென்னையில் இருந்து கொண்டு வாய்ப்புகளைத் தேடினேன். புதுமுகங்கள் தேவை என்கிற தகவல் கேள்விப்பட்டதும் அங்கு சென்று நான் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வேன். அப்படித்தான் எனக்குப் படவாய்ப்புகள் வந்தன.
என்னுடைய தோற்றத்திற்கும் நடிப்புத் திறமைக்கும் ஏற்ற வாய்ப்பு வந்தால் போதும் என்று நினைப்பேன். அதன்படிதான் இப்போது வாய்ப்புகள் வந்துள்ளன. அது மட்டும் அல்லாமல் என்னை நம்பி, தரப்படும் வாய்ப்புகளில் சரியாகப் பிரகாசிக்க வேண்டும் என்று நான் விரும்புவேன். என்கிறார் சாய் ரோஹினி.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!