
தமிழிலும் சாதிப்பாரா நிமிஷா சஜயன்
அவர் தமிழில் அறிமுகமாகும் படம் "மிஷன் 1: அச்சம் என்பதில்லையே". இந்த படத்தில் அவர் அருண் விஜய்யின் மனைவியாகவும் 6 வயது குழந்தைக்கு தாயாகவும் நடிக்கிறார். எமி ஜாக்சன் லண்டன் போலீஸ் ஆபீசராக நடிக்கிறார். மலையாள படங்களில் நடிப்பின் மூலம் புகழ்பெற்ற நிமிஷா இந்த படத்தின் மூலம் தமிழில் வலுவான கால்பதிப்பாரா என்பது படம் வெளிவந்ததும் தெரியும்.
எம். ராஜசேகர், எஸ்.சுவாதி தயாரித்துள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் வெளியிடுகிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளிவருகிறது. ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். சந்தீப் கே.விஜய் ஒளிப்பதிவு செய்துள்ளார். சென்னை மற்றும் லண்டனில் படப்பிடிப்பு நடந்துள்ளது. தொடர் தோல்விகளை சந்தித்து வரும் ஏ.எல்.விஜய்க்கும் இது முக்கியமான படமாகும்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!