
அதிக சம்பளம் - வெப் தொடர்களில் ஆர்வம் காட்டும் நடிகைகள்
சமீபத்தில் நடிகை சமந்தா நடிப்பில் வெளியான "தி பேமிலி மேன் 2" வெப் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த தொடரில் நடிக்க அவர் ரூ.4 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. சமந்தா, சினிமாவில் ஒரு படத்தில் நடிக்க அதிகபட்சமாக ரூ.1 கோடியே 50 லட்சம் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிக சம்பளம் காரணமாக நடிகைகள் பார்வை வெப் தொடர்கள் பக்கம் திரும்பி உள்ளது.
ஏற்கனவே மீனா, காஜல் அகர்வால், தமன்னா, நித்யா மேனன், ரம்யா கிருஷ்ணன், சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் வெப் தொடர்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில் முன்னணி கதாநாயகிகளான திரிஷா, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், அனுஷ்கா ஆகியோரும் வெப் தொடர்களில் நடிக்க கதை கேட்டு வருவதாக கூறப்படுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!