நடிகர் பூச்சி முருகனுக்கு உடல்நலம் பாதிப்பு
ஜூலை 10, 20261
Advertisement
திமுக., கட்சியின் பிரமுகர் பூச்சி முருகன். நடிகருமான இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணை தலைவராக உள்ளார். நண்பர்களுடன் கொடைக்கானல் வந்திருந்த இவர் ஓட்டலில் தங்கியிருந்தார். அங்கு நேற்று மதியம் திடீரென பூச்சி முருகனுக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.
இதையடுத்து உடனடியாக அங்குள்ள மருத்துவமனையில் முதலுதவி பெற்று, பின்னர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவருக்கு மூளைக்கு செல்லும் ரத்தக் குழாயில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குடும்பத்தினர் மற்றும் நடிகர் சங்க நிர்வாகிகள் அவரை மருத்துவமனை சென்று பார்த்துள்ளனர். அவர்கள் அறிவுறுத்தல் பேரில் இன்று தனி விமானம் மூலம் சென்னை கொண்டு செல்லப்படுகிறார். அங்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள் (1)
கருத்து எழுதுங்கள்மூளைக்கு செல்லும் நரம்பு பாதிப்பு என்கிறார்கள். மருத்துவமனையில் இப்படிதான் இல்லாததை எல்லாம் சொல்வார்கள். இவர் சிங்கப்பூர் செல்ல வாய்ப்பு உண்டா?