உருவ கேலியை புறந்தள்ளி ஜெயித்தவர் நடிகர் இந்திரன்ஸ் : கேரளாவில் சூர்யா பாராட்டு
மே 04, 2026
Advertisement
சூர்யா நடிப்பில் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படம் மே 14ம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து இதன் புரமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி கேரளாவில் நடைபெற்றது. பிரபல மலையாள குணச்சித்திர நடிகரும் தேசிய விருது பெற்ற நடிகருமான இந்திரன்ஸ் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த 2011ல் வெளியான நண்பன் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்திரன்ஸ் கிட்டத்தட்ட 15 வருடம் கழித்து மீண்டும் கருப்பு திரைப்படம் மூலம் தமிழுக்கு வந்துள்ளார்.
இந்த நிகழ்வில் சூர்யா நடிகர் இந்திரன்ஸ் குறித்து நெகிழ்ந்து பேசும்போது, “நடிகர் இந்திரன்ஸ் சினிமாவில் எப்படிப்பட்ட உருவ கேலிகளை எல்லாம் தாண்டி இந்த இடத்திற்கு வந்திருக்கிறார் என்பது எனக்கு நன்றாக தெரியும். சூரரைப்போற்று படத்திற்காக எனக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கொடுக்கப்பட்ட அதே நாளில் தான் இவருக்கு "ஹோம்" படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஸ்பெஷல் ஜூரி தேசிய விருது வழங்கப்பட்டது. தன்னை நோக்கி எழுந்த உருவ கேலிகளை புறம் தள்ளிவிட்டு இன்று தனக்கென ஒரு தனித்துவமான நடிப்பை கொண்டுள்ள இந்திரன்ஸ் எல்லோருக்கும் ஒரு நல்ல முன்னுதாரணம்” என்று கூறியுள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!