நடிகரும், எழுத்தாளருமான ‛பாரதி மணி காலமானார்
நவ 17, 2021
பிரபல எழுத்தாளரும், நடிகருமான பாரதி மணி(84) வயது மூப்பு காரணமாக காலமானார். நாகர்கோவில், பார்வதிபுரத்தில் பிறந்தவர் கே.கே.எஸ்.மணி எனும் பாரதி மணி. இளமை காலங்களில் நாடகங்களில் நடித்து வந்த இவர் பின்னர் சினிமாவில் குணச்சித்ர வேடங்களில் நடித்தார். ‛‛பாபா, பாரதி, ஆட்டோகிராப், ஐ"" உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பாரதியாரின் வாழ்க்கை வரலாறு படமான பாரதியில், பாரதியாருக்கு தந்தையாக நடித்ததால் "பாரதி" மணி என அழைக்கப்பட்டார்.
"பல நேரங்களில் பல மனிதர்கள்" என்ற தனது புத்தகத்திலிருந்த கட்டுரைகளும், நேர்காணல்கள், குறிப்புகள் இவைகளையெல்லாம் சேர்த்து ஒரு முழுத்தொகுப்பாக “புள்ளிகள் கோடுகள் கோலங்கள்” என்ற புத்தகத்தை வெளியிட்டார். சென்னையில் வசித்து வந்த இவர் வயது மூப்பால் நேற்று நள்ளிரவு காலமானார்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!