
சர்தார் ஓடிடி உரிமையை கைப்பற்றிய ஆஹா
பிப் 12, 2022
Advertisement
கார்த்தி இரண்டு வேடங்களில் நடித்துள்ள படம் சர்தார். பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கார்த்தியுடன் ராசி கண்ணா,ரஜிஷா விஜயன், சிம்ரன் உள்ளிட்டோர் நடிக்க, ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் கார்த்தி போலீஸ் ஆகவும், வயதான வேடத்திலும் நடித்துள்ளதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. தற்போது படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த சர்தார் படத்தின் டிஜிட்டல் உரிமையை நடிகர் அல்லு அர்ஜுனின் ஆஹா தமிழ் ஓடிடி நிறுவனம் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தியேட்டர்களில் வெளியாகி ஓடி முடித்த பிறகே இப்படம் ஓடிடியில் வெளியாகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!