
4 நாளில் 50 கோடி வசூலை கடந்த ‛ஆடுஜீவிதம்
மார் 31, 2024
Advertisement
மலையாள முன்னணி நடிகர் பிருத்வி ராஜ் கதாநாயகனாக நடித்த புதிய படம் "தி கோட் லைப்" ( ஆடுஜீவிதம்). இப்படத்தில் கதாநாயகியாக அமலாபால் , வினீத், ஜிம்மி ஜீன் லூயிஸ் உள்ளிட்ட பலர் நடித்தனர். தேசிய விருது வென்ற இயக்குநர் பிளெஸ்ஸி இந்த படத்தை இயக்கினார்.
கடந்த மார்ச் 28ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாகியுள்ள இப்படம் உலகம் முழுவதும் 1,724 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. முதல் நாளில் 16 கோடியே 70 லட்சம் வசூலித்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்த நிலையில், தற்போது 4வது நாளிலேயே ரூ.50 கோடி வசூலை கடந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இப்படத்தை பல சினிமா பிரபலங்களும் பாராட்டியுள்ளனர். நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் மணிரத்னம், ராஜீவ் மேனன், நடிகர்கள் மாதவன், கவுதம் கார்த்திக், யோகிபாபு, கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி உள்ளிட்ட பலரும் பாராட்டியுள்ளனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!