100ஐத் தொடும் 2026 தமிழ் சினிமா ரிலீஸ்
ஜூன் 01, 2026
Advertisement
2026ம் ஆண்டில் கடந்த மாதத்துடன் வெளியான படங்களின் எண்ணிக்கை 96. இந்த வாரம் ஜூன் 5ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள பரிமளா அண்ட் கோ, இரட்டையர், சம்ஹாரம், சன்னிதானம் பி.ஓ" ஆகிய படங்களுடன் 2026ன் படங்களின் பட்டியல் 100ஐத் தொட்டுவிடும்.
கடந்த 2025ம் வருடத்துடன் ஒப்பிடும் போது கடந்த வருடத்தில் மே மாதத்திலேயே 110 படங்கள் வெளியாகிவிட்டது. அவற்றுடன் ஒப்பிடும் போது இந்த வருடம் கூடுதலாக இரண்டு வாரங்களை எடுத்துக் கொண்டுள்ளது.
கடந்த வருடம் மே மாதத்தில் மட்டும் 27 படங்கள் வெளியாகின. இந்த வருட மே மாதத்தில் வெறும் 10 படங்கள் மட்டுமே வெளியாகி உள்ளன. அதனால்தான் இந்த வருடத்தில் கூடுதலாக இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது.
இனி வரும் மாதங்களில் நிறைய படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசு புதிய படங்கள் வெளியான ஒரு வாரத்திற்கு தினசரி 5 காட்சிகள் மற்றும் விடுமுறை நாட்களில் 5 காட்சிகள் என அறிவித்துள்ளதால் அதிகப் படங்கள் வர வாய்ப்புள்ளது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!