திருடா திருடி - 20 ஆண்டுகள் நிறைவு
செப் 05, 2023
Advertisement
தமிழ் சினிமா உலகில் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தியிலும் தடம் பதித்து தனக்கென தனி முத்திரையைப் பதித்துள்ள நடிகர் தனுஷ். அவரது அப்பா கஸ்தூரி ராஜா இயக்கத்தில் 2002ல் வெளிவந்த "துள்ளுவதோ இளமை" படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதற்கடுத்து அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் 2003ல் வெளிவந்த "காதல் கொண்டேன்" படத்திலும் கதாநாயகனாக வெற்றி பெற்றார்.
தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் இயக்கத்தில் நடிக்காமல், முதல் முறையாக வெளி இயக்குனரின் இயக்கத்தில் அவர் நடித்த படம் "திருடா திருடி". சுப்பிரமணிய சிவா இயக்கத்தில் வெளியான முதல் படம். 2003ல் படம் வெளியான போது யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற்றது.
தனுஷின் முதல் இரண்டு படங்கள் கொஞ்சம் சீரியசான கதையம்சம் கொண்ட படமாக இருந்த நிலையில், இந்த "திருடா திருடி" படம் ஜாலியான காதல் கதையாகவும், காமெடி படமாகவும் அமைந்து தனுஷுக்கும் கமர்ஷியல் ரீதியாக பெரிய வரவேற்பைப் பெற்றுத் தந்தது.
படத்தில் தினாவின் இசையில் அமைந்த பாடல்கள் அனைத்துமே அப்போது சூப்பர் ஹிட்டாகின. குறிப்பாக "மன்மத ராசா" பாடல் அப்போது சாட்டிலைட் டிவிக்களில் தினமும் அடிக்கடி ஒளிபரப்பாகி பெரிய வரவேற்பைப் பெற்றது. 2003ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ம் தேதி வெளிவந்த அப்படம் இன்றுடன் தனது 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!