
சந்திப்பிற்கு தடை போட்ட தளபதி நடிகர்
ஜூலை 20, 2026
Advertisement
தான் சி.எம்., ஆனதும், பல சினிமா பிரபலங்கள், தன்னை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கி கொடுத்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார், தளபதி நடிகர். ஆனால், அதில் சிலர் தன்னுடன் எடுத்த புகைப்படங்களை தங்களது படங்களின், "பப்ளிசிட்டி"க்காக பயன்படுத்த துவங்கியதால் கடுப்பாகி விட்டார்.
இதனால், விளம்பர நோக்கத்தில் தன்னை சந்திக்க வருபவர்களுக்கு, "செக் போஸ்ட்" வைத்துவிட்டார். "நட்பு ரீதியான சந்திப்புகளை வியாபாரமாக்காதீர்கள்..." என்று தன் உதவியாளர் மூலம், சில நடிகர்களுக்கு எச்சரித்துள்ளார். அதோடு, "இனிமேல் சினிமாக்காரர்கள் என்னை சந்திக்க வருவதற்கு தடை போட்டு விடுங்கள்..." என்றும் உத்தரவிட்டுள்ளார், தளபதி நடிகர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!