
கேள்விகளுக்கு பயந்து ஒதுங்கி இருக்கும் நடிகை
ஆக 19, 2025
Advertisement
சமீபத்தில் வெளியான ‛உலக" நடிகரின் படத்திற்காக இந்திய அளவில் பல்வேறு ஊர்களுக்கு சென்று படத்தை புரமோட் செய்தார் மூன்றெழுத்து நடிகை. ஆனாலும் படம் தோல்வி அடைந்தது; அவரது கேரக்டரையும் திட்டி தீர்த்தார்கள். இப்படிப்பட்ட கேரக்டரில் நடிக்கலாமா என்று கடும் விமர்சனங்கள் எழுந்தன. இது ஒருபுறம் இருக்க புதிதாக அரசியலுக்குள் வந்த நடிகரின் கட்சியில் சேரப்போவதாகவும் செய்திகள் வெளியாகின. வெளியே வந்தால் இதுப்பற்றிய கேள்விகளை கேட்பார்களோ என நினைத்து, மீடியா வெளிச்சம் படாமல் ஒதுங்கி இருக்கிறாராம்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!