
மாயாவதி பற்றி அவதூறு: ரன்தீப் ஹூடாவின் ஐநா தூதர் பதவி பறிப்பு
ரன்தீப் ஹூடா பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் அப்போதைய உத்தர பிரதேச முதல்வர் மாயாவதி குறித்து காமெடியாக ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அப்போது கவனிக்கப்படாத அந்த விஷயம். இப்போது வீடியோவாக பரவி வருகிறது. அவர் மாயாவதியை ஜாதி ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் கொச்சைபடுத்துவதாக விமர்சிக்கப்படுகிறது.
இதனால் ரன்தீப் ஹூடாவை ஐக்கிய நாடுகள் சபை தனது தூதர் பதவியில் இருந்து நீக்கி உள்ளது. அவர் ஐநா சபையில் காட்டு விலங்குகள் பாதுகாப்பு அமைப்புக்கான தூதராக பதவி வகித்து வந்தார்.
இது குறித்து ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: எங்களின் தூதர் ரன்தீப் ஹூடா பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில் அவர் பேசிய கருத்துகள் அவதூறாகவும், எங்கள் அமைப்பின் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கைகளுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாத வண்ணம் உள்ளது. ஹூடா, இனி இந்த அமைப்பின் தூதராகச் செயல்பட மாட்டார். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!