
அக்சய் குமார் படத்திற்கு கர்ணி சேனா அமைப்பு நிபந்தனை
மாவீரன் பிரித்விராஜின் பெயரில் இந்தப்படம் உருவாவதை தாங்கள் விரும்பவில்லை என்றும், அதனால் படத்தின் டைட்டிலை மாற்றி பிரித்விராஜின் பெயருக்கு இன்னும் மரியாதையை கூட்டுமாறு வேறு ஒரு டைட்டில் வைக்கும்படியும் இந்த கர்ணிசேனா என்கிற அமைப்பினர் கூறியுள்ளனர்.
மேலும் ஏற்கனவே இதுபோல தீபிகா படுகோனே நடித்த பத்மாவதி படக்குழுவினர் பெயரை மாற்றுவதற்கு அடம்பிடித்ததால், அந்தப்படம் எடுக்கப்பட்டு வந்த படப்பிடிப்பு அரங்குகள் எப்படி அடித்து நொறுக்கப்பட்டன என்பதையும், அதன்பிறகு அந்த படத்தின் பெயர் பத்மாவத் என மாற்றப்பட்டதையும் குறிப்பிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளனர்

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!