தேசிய விருதை ஷோலே இயக்குனருக்கு அர்ப்பணித்த பிரியதர்ஷன்
ஜூன் 02, 2021
Advertisement
மலையாளத்தில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் பிரியதர்ஷன். கடந்த வருடம் இவர் இயக்கத்தில் உருவாகி, தற்போது ரிலீசுக்கு தயாராக காத்திருக்கும் படம் "மரைக்கார் ; அரபிக்கடலிண்டே சிம்ஹம்". மோகன்லால் அர்ஜுன், சுனில் ஷெட்டி, பிரபு கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட, பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த வரலாற்று படம் சமீபத்தில் கடந்த வருடத்திற்கான சிறந்த படத்திற்கான தேசிய விருது பெற்றது.
இந்த நிலையில் இயக்குனர் பிரியதர்ஷன் இந்த படத்திற்காக தனக்கு கிடைத்த விருதை ஷோலே பட இயக்குனர் ரமேஷ் சிப்பி மற்றும் இயக்குனர் டேவிட் லீன் ஆகியோருக்கு சமர்ப்பணம் செய்வதாக அறிவித்துள்ளார். மிகப்பெரிய பிரேம்களை எப்படி வைக்க வேண்டும் என, அவர்களிடமிருந்து தான் கற்றுக் கொண்டதாகவும், அதனாலேயே அவர்களுக்கு இந்த விருதை காணிக்கையாக்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார் இயக்குனர் பிரியதர்ஷன்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!