
25வது படம் : வேதாவாக மாற உழைக்கும் ஹிருத்திக் ரோஷன்
இந்த படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் ஆகிறது. இதனையும் சஷிகாந்த் தயாரிக்கிறார், புஷ்கர், காயத்ரி இயக்குகிறார்கள். மாதவன் நடித்த விக்ரம் கேரக்டரில் சைப் அலி கானும், விஜய் சேதுபதி நடித்த வேதா கேரக்டரில் ஹிருத்திக் ரோஷனும் நடிக்கின்றனர். ஹிருத்திக் ரோஷன் கடைசியாக வார் படத்தில் நடித்தார். கடந்த ஆண்டு அவரது படங்கள் எதுவும் வெளிவரவில்லை.
தற்போது விக்ரம் வேதா அவருக்கு 25வது படமாக அமைவதால் இந்த படத்திற்காக கூடுதல் கவனம் செலுத்த தொடங்கி உள்ளார். குறிப்பாக தனது உடல் எடையை கூட்டி வருகிறார். விஜய்சேதுபதியின் மேனரிசத்தை அப்படியே காப்பி அடிக்காமல் தனக்கென தனி மேனசரிம் ஒன்றை உருவாக்கி வருகிறார். மே மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!