
ஆகஸ்டில் ஷாரூக்கான் - அட்லி படம் ஆரம்பம்
இந்த நிலையில், தனது 66ஆவது படத்தை இயக்கும் வாய்ப்பினை அட்லிக்கு விஜய் கொடுத்திருப்பதாக கூட ஒரு தகவல் வெளியாகி வந்தது. ஆனால் அது உறுதிப்படுத்தப்படவில்லை. அதையடுத்து ஷாரூக்கான் படத்திற்கான கதை விவாதத்தில் அட்லி ஈடுபட்டிருக்கும் ஒரு வீடியோவை அவரது மனைவியான பிரியா சோசியல் மீடியாவில் வெளியிட்டதை அடுத்து அந்த படம் குறித்து செய்திகள் மீண்டும் புகையத் தொடங்கியது.
இந்த நிலையில், தற்போது பதான் என்ற படத்தில் நடித்து வரும் ஷாரூக்கான் அதையடுத்து ராஜ்குமார் ஹிரானி இயக்கும் படம் மற்றும் அட்லி இயக்கும் படத்திலும் நடிக்கப்போகிறாராம். அந்த வகையில் ஷாரூக்கான் - அட்லி இணையும் படம் இந்த ஆண்டு ஆகஸ்டில் இருந்து தொடங்குவதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!