
கணவன் மனைவியை சேர்த்து வைத்த கொரோனா
இதையடுத்து நவாசுதீன் சித்திக்குக்கு ஆலியா விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார். நவாசுதீனும் அதற்கு ஒப்புக் கொண்டு இருவரும் பரஸ்பரம் ஒப்புதலுடன் பிரிய முடிவு செய்திருந்தனர். தற்போது நவாசுதீன் சித்திக்கும், ஆலியாவும் விவாகரத்து முடிவை கைவிட்டு ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள்.
இதுகுறித்து ஆலியா கூறியிருப்பதாவது: சில வாரங்களுக்கு முன்பு எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. குழந்தைகளுடன் இருக்க முடியவில்லை. அப்போது நவாசுதீன் சித்திக் குழந்தைகளை பார்த்துக் கொண்டார். என்னையும் கவனித்துக் கொண்டார். நல்ல தந்தையாக, கணவனாக அவர் இருந்தார். அன்பாக இருக்கிறார். அவரது இன்னொரு பக்கத்தை பார்த்தேன். நடந்ததை மறந்து குழந்தைகளுக்காக சேர்ந்து வாழ முடிவு செய்தேன். திருமணம் பந்தம் என்பது அற்புதமானது என்பதை அவரும் நானும், உணர்ந்திருக்கிறோம். என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!