
கங்குபாய் கத்தியவாடி படத்திற்கு எதிர்ப்பு
மும்பையின் சிவப்பு விளக்குப் பகுதியான காமாத்திபுராவைக் கதைக்களமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் இது. ஹுசைன் சைதி எழுதிய "மாபியா குயின்ஸ் ஆப் மும்பை" என்ற புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் எம்எல்ஏவான அமின் பட்டேல் என்பவர் படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். "கத்தியவாடி" நகரின் பெயரைக் கெடுப்பது போல தலைப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
“1950களில் இருந்த நகரைப் போல அது இல்லை. அங்கிருந்த பல பெண்கள் தற்போது பல விதமான வேலைகளுக்குச் சென்றுவிட்டார்கள்,” என்றும் அவர் கூறியுள்ளார்.
படத்தின் டீசருக்கு பல்வேறு விதமான விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது படத்திற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் படங்களுக்கு எப்போதுமே சர்ச்சை வருவது வழக்கம். இந்தப் படத்திற்கும் அது போலவே வந்துள்ளதாக பாலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!