
50வது நாளில் இந்தியாவில் 1000 கோடியை நெருங்கும் துரந்தர்
கடந்த வருடத்தில் அதிக வசூலைக் குவித்த படம் என்ற பெருமையைப் பெற்று உலக அளவில் 1300 கோடி வசூலைக் கடந்துள்ளது. தற்போது 50வது நாளைக் கடந்துள்ள இப்படம் இந்தியாவில் மட்டும் நிகர வசூலாக 1000 கோடியை நெருங்குவதாக பாலிவுட் பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வருடத்தில் அதிக வசூலைக் குவித்த ஹிந்திப் படங்களில் முதலிடம் பெற்று சாதனை படைத்தது. உலக அளவில் அதிக வசூலைக் குவித்த இந்திய படங்களில் தற்போது 4வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் "டங்கல்", இரண்டாம் இடத்தில் "புஷ்பா 2", மூன்றாமிடத்தில் "பாகுபலி 2" ஆகியவை உள்ளன.
தன்னைவிட முன்னிலையில் உள்ள மூன்று படங்களின் சாதனையை முறியடிக்க வாய்ப்பில்லை என்றாலும், இந்தப் படம் "டங்கல்" படத்திற்குப் பிறகு அதிகம் பேசப்பட்ட, வசூலிக்கப்பட்ட இரண்டாவது ஹிந்திப் படமாக உள்ளது.
இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். "பாகுபலி 2, புஷ்பா 2" சாதனை படைத்தது போல "துரந்தர் 2" படமும் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகீறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!