
சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய்
பாலிவுட் நடிகை மவுனி ராய் பெரும்பாலும் ஹிட் திரைப்படங்களில் சிறப்பு பாடலுக்கு நடனம் ஆடி வந்தாலும் "நாகினி" என்கிற சீரியல் மூலமாக தான் ரசிகர்களிடம் அதிக அளவில் பிரபலமானவர். ஹிந்தியில் மட்டுமல்லாது தற்போது தெலுங்கில் சிரஞ்சீவி, திரிஷா இணைந்து நடித்து வரும் "விசுவம்பரா" திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது தனது நண்பர்கள் குழுவுடன் ட்ரெக்கிங் சென்று வந்துள்ளார் மவுனி ராய். இது குறித்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள அவர், காடுகளுக்குள் நடந்தது, அருவி வழியாக மலையில் இருந்து இறங்கியது ஆகியவற்றை கூறியவர் திடீரென ஒரு சிறுத்தையின் கர்ஜனையை கேட்டு உயிர் பிழைக்க ஓடினோம் என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!