அடுத்த ஹிந்தி படத்திற்கான டப்பிங் பணிகளை தொடங்கிய பூஜா ஹெக்டே
Advertisement
Advertisement
அடுத்த ஹிந்தி படத்திற்கான டப்பிங் பணிகளை தொடங்கிய பூஜா ஹெக்டே
மார் 29, 2026
அ நிறம் | அளவு
Advertisement
மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் அறிமுகமான மும்பை நடிகை பூஜா ஹெக்டே, அதன் பிறகு தெலுங்கு, ஹிந்தியில் நடித்து வந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் மீண்டும் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து ரெட்ரோ, கூலி போன்ற படங்களில் நடித்தவர் தற்போது விஜய்யுடன் மீண்டும் ஜனநாயகன் மற்றும் ராகவா லாரன்ஸ் உடன் காஞ்சனா 4 படங்களில் நடித்துள்ளார். ஹிந்தியில் வருண் தவான், மிருணாள் தாக்கூருடன் இணைந்து, ஹை ஜவானி துஸ்கு ஹோனா ஹை என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டப்பிங் பணிகளை தற்போது தான் தொடங்கி இருப்பதாக தெரிவித்திருக்கும் அவர், அந்த டப்பிங் ஸ்டுடியோவில் தான் எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். மேலும், காதல் நகைச்சுவை கலந்த கதையில் உருவாகியுள்ள இந்த படத்தை டேவிட் தவான் இயக்கி உள்ளார். அதோடு, மணிஷ் பால், மவுனி ராய், சங்கீ பாண்டி, ராகேஷ் பேடி, அலி அஸ்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படம் ஜூன் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!