
ஒரு டிரைலரிலேயே முழு படத்தைக் காட்டிய சிங்கம் அகைன் டிரைலர்
இப்படத்தின் டிரைலர் நேற்று யு டியுப் தளத்தில் வெளியானது. டிரைலர் மட்டுமே 5 நிமிடம் வரை ஓடுகிறது. அதில் படத்தில் உள்ள அனைத்து முக்கிய காட்சிகளையும் காட்டியது போல, ஒரு முழு படத்தைப் பார்த்த உணர்வே ஏற்படுகிறது.
இப்படி ஒரு டிரைலரை இதுவரை பார்த்ததில்லை என ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கமெண்ட் செய்து வருகிறார்கள். ராமாயணக் கதையின் காட்சிகளுடன் இப்படத்தின் கதாபாத்திரங்களை உருவகப்படுத்தி படத்தை உருவாக்கி இருக்கிறார்கள் எனத் தெரிகிறது.
படத்தில் உள்ள முக்கிய நடிகர்கள் அனைவருமே பாலிவுட்டின் அன்றைய, இன்றைய முன்னணி நட்சத்திரங்கள்தான். ஒவ்வொருவரின் ரசிகர்கள் வந்து படத்தைப் பார்த்தால் கூட படத்தை ஓட வைத்துவிடலாம்.
"கேஜிஎப்" இசையமைப்பாளர் ரவி பர்சூர் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ரன்வீர் சிங்கின் டிராக் ஒன்றிற்கு தமன் இசையமைத்துள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 1ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் டிரைலர் "டிரோல்" செய்யப்பட்டாலும் அதற்குள் 29 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!