
ரத்தன் டாடா தயாரித்த ஒரே படம்
டாடா குழுமம் பல்வேறு தொழில்களில் களமிறங்கி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ரத்தன் டாடா. இவர் பல்வேறு தொழில்களில் சாதித்தாலும் சினிமா பக்கம் ஆர்வம் காட்டவில்லை. சினிமா பார்க்க தனக்கு நேரமில்லை என்று முன்பு கூறியுள்ள இவர் பாலிவுட்டில் ஒரே ஒரு படம் மட்டும் தயாரித்துள்ளார்.
2004ல் விஜய் பட் இயக்கத்தில் அமிதாப் பச்சன், ஜான் ஆபிரஹாம் மற்றும் பிபாசா பாசு நடிப்பில் வெளியான படம் ‛ஆட்பார்". இந்த படத்தை ரத்தன் டாடா தான் இணை தயாரிப்பாளராக இருந்து தயாரித்தார். அன்றைய காலக்கட்டத்தில் ரூ.9 கோடி செலவில் தயாரான படம் தோல்வியை தழுவியது. இதனால் தான் என்னவோ அதன்பின் இவர் படங்களே தயாரிக்கவில்லை. ரத்தன் டாடா கால்பதித்து சறுக்கிய ஒரே தொழில் சினிமா என்று கூட சொல்லலாம்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!