
தென்னிந்திய சினிமாவை புகழ்ந்த ஷாரூக்கான்
அதன் பின்னர் இந்நிகழ்வில் உரையாடிய ஷாரூக்கான் கூறுகையில், “இந்தியா பரந்து விரிந்த பல மொழிகளைக் கொண்ட நாடு. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, குஜராத்தி, மராத்தி, பெங்காலி என பல மொழிகள் உள்ளன. அவையெல்லாம் சேர்ந்தது தான் இந்திய சினிமா. இந்தியாவில் சிறந்த கதை சொல்லும் பகுதிகளாக நான் தென்னிந்தியாவை கருதுகிறேன். அவர்களிடம் நல்ல கதைகள் உள்ளன.
மலையாள சினிமா, தெலுங்கு சினிமா, தமிழ் சினிமாவில் மிகப் பெரிய சூப்பர் ஸ்டார்கள் இருப்பது நாம் எல்லோரும் தெரியும். சமீபத்தில் வெளிவந்த "ஜவான்", "ஆர்ஆர்ஆர்", "பாகுபலி" உள்ளிட்ட படங்களின் வெற்றி அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது. உண்மையில் திரைப்படங்களாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் தென்னிந்திய சினிமா மிக மிக அற்புதமானது. இயக்குனர் மணிரத்னத்துடன் "தில் சே" படத்தில் பணியாற்றிய பிறகு தென்னிந்திய இயக்குனர்களின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற விருப்பம் எனக்கு இருந்தது. அவர்களிடம் வித்தியாசமான கதை சொல்லல் முறை உள்ளது” என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!