14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன்
ஏப் 26, 2024
Advertisement
தென்னிந்திய இயக்குனர்கள் பாலிவுட்டில் சென்று கால் பதித்தாலும் அங்கே நிலைத்து நிற்பது ரொம்பவே கடினம். ஆனால் மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேலாக பாலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார். இதுவரை ஹிந்தியில் 27 படங்களை இயக்கியுள்ள அவர் கடந்த 2009, 2010 என இரண்டு வருடங்களில் மட்டும் தொடர்ந்து ஐந்து ஹிந்தி படங்களை அவர் இயக்கி உள்ளார். கடந்த 2021ல் "ஹங்குமா 2" படத்தை இயக்கிய பிரியதர்ஷன் மூன்று வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஹிந்தியில் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக அக்ஷய் குமார் நடிக்கிறார்.
ஏற்கனவே பாஹம் பாக், ஹேரா பெரி, கரம் மசாலா என பிரியதர்ஷன் டைரக்ஷனில் பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள அக்ஷய் குமார் கடந்த 2010ல் அவரது இயக்கத்தில் கட்டா மீதா என்கிற படத்தில் நடித்திருந்தார். தற்போது 14 வருடங்கள் கழித்து மீண்டும் பிரியதர்ஷன் டைரக்சனில் நடிக்க இருக்கிறார். மேஜிக்கை பின்னணியாக கொண்டு காமெடி கலந்த ஹாரர் பேண்டஸி படமாக இது உருவாக இருக்கிறது. கடந்த சில வருடங்களாகவே இறங்கு முகத்தில் இருக்கும் அக்ஷய் குமாரின் மார்க்கெட் பிரியதர்ஷன் படம் மூலமாக மீண்டும் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கலாம்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!