அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு
ஏப் 26, 2024
Advertisement
"பாரத ரத்னா" விருது பெற்ற பின்னணி பாடகியான லதா மங்கேஷ்கர் நினைவாக அவரது குடும்பத்தினர் ஆண்டுதோறும் லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருது வழங்கி வருகிறார்கள். இந்த ஆண்டு இந்த விருது பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், நடிகை பத்மினி கோலாபுரி, இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோருக்கு வழங்குவதாக அறிவித்தார்கள்.
இந்த விருது வழங்கும் விழா நேற்று மும்பையில் நடந்தது. இதில் அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோருக்கு விருது வழங்கப்பட்டது.
விருதை பெற்றுக் கொண்ட அமிதாப் பச்சன் “கேட்போரின் ஆன்மாவை கரையச் செய்யும் பாடகரின் நினைவாக இந்த விருதைப் பெறுவது அதிர்ஷ்டம்” என்று நெகிழ்ந்து பேசினார்.
“இப்படியொரு பெருமை எனக்கு கிடைத்திருப்பதில் ரொம்பவே சந்தோஷம்” என்றார் ரஹ்மான்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!