
ஸ்ரீதேவி வாழ்க்கையை சினிமாவாக எடுக்க அனுமதிக்க மாட்டேன்: கணவர் போனி கபூர் உறுதி
இந்த நிலையில் ஸ்ரீதேவியின் வாழ்க்கையை படமாக்க பலரும் முயற்சித்தனர். ஆனால் அதற்கு போனி கபூரும், அவரது மகள்களும் சம்மதிக்கவில்லை. இதற்கிடையில் "ஸ்ரீதேவி பங்களா" என்று பாலிவுட்டில் ஒரு படம் வந்தது. ஒரு நடிகை தன் வீட்டில் மர்மமான முறையில் இறப்பதுதான் படத்தின் கதை. இது ஸ்ரீதேவியின் கதை அல்ல என்று தயாரிப்பு தரப்பு மறுத்து படத்தை வெளியிட்டது.
இந்த நிலையில் நான் உயிரோடு இருக்கும் வரை ஸ்ரீதேவியின் கதையை படமாக்க விடமாட்டேன் என்ற போனி கபூர் மீண்டும் உறுதியாக தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: ஸ்ரீதேவி பெரும்பாலும் தனிப்பட்ட நபராக இருக்க விரும்புவார். அவர் வாழ்க்கையும் தனிப்பட்டதாகவே இருக்க வேண்டும். அவரது வாழ்க்கை வரலாறு படமாக்கப்படாது என நினைக்கிறேன். நான் உயிரோடு இருக்கும்வரை அதை அனுமதிக்கமாட்டேன்” என தெரிவித்துள்ளார்.
பல முன்னணி நடிகர்கள் ஸ்ரீதேவியை காதலித்த நிலையில் அவர் திடீரென போனி கபூரை திருமணம் செய்து கொண்டது. அவரது திடீர் மரணம் போன்றவை இன்னும் பல கேள்விகளோடு இருப்பதால் போனி கபூர் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!