
எதிர்ப்பை மீறி தூர்தர்ஷனில் ஒளிபரப்பான தி கேரள ஸ்டோரி
இத்தகைய சர்ச்சையை, பரபரப்பை கிளப்பிய படத்தை சுதிப்தோ சென் என்பவர் இயக்கி இருந்தார். கதாநாயகியாக அடா சர்மா நடித்திருந்தார். சிறிய பட்ஜெட்டில் உருவாகி இருந்த இந்த படம் கிட்டத்தட்ட 200 கோடி வரை வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. இந்த நிலையில் இந்த படம் ஏப்., 5ல் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் என்கிற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதனைத் தொடர்ந்து இந்த படம் வெளியான போது கேரளாவில் இதை வெளியிட எதிர்ப்பு தெரிவித்த இரண்டு பிரதான கட்சிகளும் சில அமைப்புகளும் இந்த அறிவிப்புக்கு பலத்தை எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
தேர்தல் நேரத்தில் இப்படி இந்த படத்தை தூர்தர்ஷனில் ஒளிபரப்புவது விதிகளை மீறிய செயல் என்றும் உண்மைக்கு புறம்பான செய்திகளை வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தை வெளியிடுவதன் மூலம் ஒரு அரசு நிறுவனமான தூர்தர்ஷன் பாஜக என்கிற கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறது என்று எதிர்க்கட்சியை சேர்ந்த பலரும் குற்றம் சாட்டினர். ஆனாலும் இந்த எதிர்ப்பை எல்லாம் மீறி நேற்று (ஏப்., 5) தூர்தர்ஷனில் இந்தப்படம் ஒளிபரப்பானது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!