
யஷ் ஜோடியாகும் கியாரா அத்வானி
ஏப் 02, 2024
Advertisement
கே.ஜி.எப் படத்தின் இரண்டு பாகங்களுக்கு பிறகு யஷ் நடிக்கும் 19வது படமாக "டாக்சிக்" உருவாகி வருகிறது. கே.வி.என் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை மலையாள இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்குகிறார். தற்போது படத்திற்கு முந்தைய தயாரிப்பு பணிகள் தீவிரமாகி உள்ளன. இந்த படத்தில் யஷ்ஷிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கவுள்ளார். இவர் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‛கேம் சேஞ்சர்" படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இவர் தவிர மற்றொரு பாலிவுட் நடிகையான கரீனா கபூரும் நடிக்கிறார். இவர் படத்தில் யஷ்ஷின் அக்கா கதாபாத்திரத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதாக சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.
Tags
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!