
ஹிருத்திக் ரோஷனுக்கு வில்லனாகும் ஜூனியர் என்டிஆர்
ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் 2019ல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற படம் "வார்". ஷாரூக்கானின் பதான் மற்றும் சமீபத்தில் வெளியான பைட்டர் ஆகிய படங்களை இயக்கிய சித்தார்த் ஆனந்த் தான் இந்த படத்தை இயக்கினார். அடுத்ததாக வார் படத்தின் இரண்டாம் பாகம் வார்-2 என்கிற பெயரில் தயாராக இருக்கிறது.
இதில் ஹிருத்திக் ரோஷனுக்கு வில்லனாக நடிக்க இருக்கிறாராம் ஜூனியர் என்டிஆர். இந்த படத்திற்குப் பிறகு அவரது திரையுலக பயணத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்றும் பாலிவுட்டிலும் அவர் வரவேற்பை பெறுவார் என்றும் சொல்லப்படுகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!