
சினிமா ஆகிறது சத்ரபதி சிவாஜி வாழ்க்கை : ஜெனிலியா தயாரிக்கிறார்
அந்த வரிசையில் தற்போது மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கையும் சினிமா ஆகிறது. இதில் சிவாஜி கதாபாத்திரத்தில் பிரபல ஹிந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் நடிக்கிறார். இவரே படத்தை இயக்கவும் செய்கிறார். அவரது மனைவியும், நடிகையுமான ஜெனிலியா தயாரிக்கிறார்.
இதுகுறித்து ரித்தேஷ் தேஷ்முக் கூறும்போது, ""இந்திய சரித்திரத்தில் மகத்தான இடத்தை பிடித்துள்ள மராட்டிய மன்னர் சிவாஜியாக நடிப்பதில் பெருமை அடைகிறேன். இந்த படத்தை நானே டைரக்டும் செய்கிறேன். சத்ரபதி சிவாஜி என்ற பெயரே ஒரு உணர்வுப்பூர்வமான விஷயம் ஆகும். இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் அவரது பெயரை கேட்டாலே எமோஷனல் ஆவார்கள்.
இந்திய மண்ணில் பிறந்த மாணிக்கம் அவர். அவரது வாழ்க்கை எதிர்கால தலைமுறைக்கு ஒரு இன்ஸ்பிரேஷன். அப்படிப்பட்டவரின் வாழ்க்கையை சினிமா படமாக எடுப்பதை பெருமையான விஷயமாக நினைக்கிறேன். எங்களின் இந்த புதிய முயற்சிக்கு அனைவரின் ஆசியும் வேண்டும்"" என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!