
ஷில்பா ஷெட்டிக்காக ஆணை பெண்ணாக மாற்றிய ரோஹித் ஷெட்டி
சித்தார்த் மல்ஹோத்ரா கதாநாயகனாக நடித்துள்ள இந்த வெப் சீரிஸில் விவேக் ஓபராய் முக்கிய வேடத்தில் நடிக்க, கதாநாயகியாக ஷில்பா ஷெட்டி ஒரு போலீஸ் கமாண்டோவாக நடித்துள்ளார். இவரது கதாபாத்திரத்தில் ஒரு ஆச்சரியம் இருப்பதாக தற்போது கூறியுள்ளார் இயக்குனர் ரோஹித் ஷெட்டி.
அதாவது இந்த கதாபாத்திரத்தை முதலில் ஒரு ஹீரோ நடிப்பதாகத்தான் உருவாக்கி இருந்தாராம் ரோஹித் ஷெட்டி. ஆனால் எதற்காக வழக்கமாக கதாநாயகர்களையே நடிக்க வைக்க வேண்டும் என நினைத்த ரோஹித் ஷெட்டி. அப்படியே கதாநாயகி நடிக்கும் விதமாக மாற்றி விட்டார்.
அப்படி மாற்றியதுமே அதற்கு தோதாக ஷில்பா ஷெட்டி தான் அவரது மனதில் பளிச்சிட, அவர் எதிர்பார்த்தபடியே தற்போது இந்த வெப் சீரிஸில் அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார் ஷில்பா ஷெட்டி. மேலும் இயக்குனர் ரோஹித் ஷெட்டி கூறும்போது பாலிவுட்டில் போலீஸ் கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு என இரண்டு கதாநாயகிகள் மட்டுமே உள்ளனர். அதில் ஒருவர் ஷில்பா ஷெட்டி என்று கூறியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!