
வைஷ்ணவ தேவி கோயிலுக்குச் சென்ற ஷாரூக்கான்
இந்த ஆண்டில் அவர் நடித்து வெளிவந்து 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்த "பதான், ஜவான்" படங்களின் வெளியீட்டிற்கு முன்பாகவும் அந்த கோயிலுக்குச் சென்றார் ஷாரூக்கான். தொடர்ந்து "டங்கி" வெற்றிக்காகவும் பிரார்த்தனை செய்துள்ளார்.
கோயிலில் தன்னால் பக்தர்களுக்குத் தொந்தரவு வரக் கூடாதென தனது முகத்தை மறைத்துக் கொண்டு அவர் சென்றுள்ளார். போலீசார் பாதுகாப்புடன் ஷாரூக் சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது.
ஒரே ஆண்டில் வெளியாகும் ஷாரூக்கின் மூன்றாவது படம் "டங்கி". முந்தைய இரண்டு படங்களைப் போலவே இந்தப் படமும் 1000 கோடியை வசூலிக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!