
மறைந்த பிரதமர் இந்திரா உடன் உரையாடிய கங்கனா
சமீப காலமாக செயற்கை நுண்ணறிவு முறையில் மறைந்த பிரபல தலைவர்களை கூட உயிருடன் இருப்பது போன்றும் அவர்கள் பேசுவது போன்றும் தத்ரூபமாக உருவாக்கி வருகின்றனர். அந்த வகையில் மறைந்த பாரதப் பிரதமர் இந்திராவின் உருவத்தை செயற்கை நுண்ணறிவு முறையில் உருவாக்கி அவருக்கு எதிரில் கங்கனா அமர்ந்து கொண்டு அவருடன் உரையாடியுள்ளார்.
இதுகுறித்த புகைப்படங்களையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் கங்கனா. அதுமட்டுமல்ல செயற்கை நுண்ணறிவு முறையில் உருவாக்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி உடனும் அவர் உரையாடியது குறித்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!