
அனிமல் முதல் நாள் வசூல் ரூ.116 கோடி என அறிவிப்பு
இந்த ஆண்டில் முதல் நாளிலேயே 100 கோடி வசூலைக் கடந்த 5வது படமாக "அனிமல்" படம் அமைந்துள்ளது. 2023ம் ஆண்டைப் பொறுத்தவரையில் முதல் நாள் வசூலில் 148 கோடி வசூலித்து தமிழ்ப் படமான "லியோ" முதலிடத்திலும், 140 கோடி வசூலித்து "ஆதிபுருஷ்" 2வது இடத்திலும், 129 கோடி வசூலித்து "ஜவான்" 3ம் இடத்திலும், 116 கோடி வசூலித்து "அனிமல்" 4ம் இடத்திலும், 106 கோடி வசூலித்து "பதான்" 5வது இடத்திலும் உள்ளது.
இதுவரையில் வெளியான படங்களில் "ஆர்ஆர்ஆர்" படம் முதல் நாளில் 223 கோடி வசூலித்து முதலிடத்திலும், "பாகுபலி 2" படம் 214 கோடி வசூலித்து இரண்டாமிடத்திலும், "கேஜிஎப் 2" படம் 162 கோடி வசூலித்து மூன்றாமிடத்திலும் உள்ளது.
மொத்தமாகப் பார்த்தால் "டாப் 5" படங்களில் முதல் நான்கு இடங்களை தென்னிந்தியப் படங்களே பிடித்துள்ளன.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!