
தூம் படங்களின் இயக்குனர் சஞ்சய் காத்வி திடீர் மரணம்
56 வயதான சஞ்சய் காத்வி மும்பையில் தனது மனைவி ஜினா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். எந்த உடல்நல பிரச்னையும் இல்லாத அவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். சஞ்சய் காத்வி மறைவு பாலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!