
ஆமீர்கான் நடிக்க கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பயோகிராபி ?
இந்திய அணியில் பரபரப்பாக விளையாடிக் கொண்டிருந்த போது "கேன்சர்" நோயால் பாதிக்கப்பட்டவர். சிகிச்சைக்குப் பின் மீண்டு வந்து விளையாடி அசத்தியவர்.
அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க ஹிந்தி நடிகர் ஆமீர்கான் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதற்காக பெரும் தொகை கொடுத்து அந்த உரிமையை யுவராஜிடமிருந்து பெற்றுள்ளாராம். விரைவில் அது பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரிகிறது.
இதற்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணி வீரரான எம்எஸ் தோனியின் பயோகிராபி படம் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆமீர்கான் நடித்து 2001ல் வெளிந்த "லகான்" படம் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதனால், யுவராஜின் வாழ்க்கை வரலாற்றைப் பொறுப்பாகவும், சிறப்பாகவும் ஆமீர்கான் தயாரித்து நடிப்பார் என்ற நம்பிக்கை கிரிக்கெட் ரசிகர்களிடமும், சினிமா ரசிகர்களிடமும் நம்பிக்கை அளித்துள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!