
ஜூலை 10ல் ஜப்பானில் வெளியாகும் துரந்தர்
இரண்டு படங்களும் சேர்த்து கிட்டத்தட்ட 3000 கோடிக்கு மேல் வசூலித்துள்ள நிலையில், தற்போது "துரந்தர்" படத்தின் முதல் பாகம் ஜப்பானில் வரும் ஜூலை 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது என்கிற அறிவிப்பை, படத்தின் நாயகன் ரன்வீர் சிங் ஒரு ஸ்பெஷல் வீடியோ மூலமாக வெளிப்படுத்தியுள்ளார். அதிரடி, உணர்ச்சி மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை என அனைத்து அம்சங்களையும் கொண்ட ஒரு பிரம்மாண்டமான சினிமா அனுபவமாக இந்தப் படம் இருக்கும்; அதனால் ஜப்பானியர்கள் திரையரங்கிற்கு வந்து இதைக் காண வேண்டும் என்றும் அந்த வீடியோ மூலமாக அழைப்பு விடுத்துள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!