
கன்னட நாவலை தழுவி மூன்றாவது படத்தை இயக்கும் காஷ்மீர் பைல்ஸ் இயக்குனர்
இதைத் தொடர்ந்து சமீபத்தில் அவரது இரண்டாவது படமாக "தி வேக்ஸின் வார்" என்கிற படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது. ஆனால் முதல் படம் ஏற்படுத்திய தாக்கத்தில் அதற்கு கிடைத்த வரவேற்பு 10 சதவீதத்தை கூட இந்த படம் பெறவில்லை. இந்த நிலையில் சூட்டோடு சூடாக தனது மூன்றாவது படத்தில் வேலைகளில் இறங்கி விட்டார் விவேக் அக்னிஹோத்ரி.
இந்த படத்திற்கு பர்வா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. பிரபல கன்னட எழுத்தாளர் எஸ்.எல் பைரப்பா எழுதிய பர்வா என்கிற நாவலை தழுவியே இந்த படம் உருவாக இருக்கிறது. மகாபாரதத்தில் இடம் பெற்ற முக்கியமான கதாபாத்திரங்களின் தனிப்பட்ட குணாதிஷயங்களை மையப்படுத்தி இந்த படம் உருவாக இருக்கிறது. குறிப்பாக இந்த படம் மூன்று பாகங்களாக தயாராக உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!