
சினிமா விமர்சகர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்த ஊர்வசி ரவுட்டேலா
இந்த நிலையில் சினிமா விமர்சகர் ஒருவர், ஏஜென்ட் படத்தின் படப்பிடிப்பு ஐரோப்பாவில் நடைபெற்றபோது நாயகன் அகில், ஊர்வசி ரவுட்டேலாவை துன்புறுத்தினார் என்றும், அகில் பக்குவம் இல்லாத நடிகர் என்றும் அவருடன் பணியாற்றுவது வசதி குறைவாக இருந்தது என்று ஊர்வசி ரவுட்டேலா கூறியதாகவும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் அந்த நபர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதிவு ஊர்வசி ரவுட்டேலாவின் கவனத்திற்கு வந்ததும் கோபமான அவர், இது முற்றிலும் தவறான செய்தி என்று கூறியதுடன், அவர்மீது அவதூறு வழக்கு தொடர்ந்து நோட்டிஸ் அனுப்பியுள்ளார். மேலும் அந்த நபர் பற்று ஊர்வசி கூறும்போது, “உங்களுடைய கருத்துக்கள் ரொம்பவே கடுமையாக இருக்கின்றன. நீங்கள் என்னுடைய அதிகாரப்பூர்வமான மக்கள் தொடர்பாளர் அல்ல. உங்களுடைய பக்குவமற்ற செயலால் என்னையும் என்னுடைய குடும்பத்தையும் ரொம்பவே வருத்தப்பட வைத்து விட்டீர்கள் என்று கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!