
10 கோடிக்கு காரை வாங்கிய ஷாரூக்கான்
கார்கள் மீது அதிக ஆசை கொண்ட ஷாரூக்கான் "பதான்" வெற்றிக்காக 10 கோடி ரூபாய் செலவில் புதிதாக ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவியுள்ளது. 0555 என்ற பேன்சி நம்பருடன் கூடிய வெள்ளை நிறக் காரை அவர் வாங்கியுள்ளார். அவரே இந்தக் காரை மும்பையில் இரவு நேரங்களில் ஓட்டிக் கொண்டு சென்றதாகச் சொல்கிறார்கள்.
ஷாரூக்கானிடம் ஏற்கெனவே பான்டம் டிராப்ஹெட் கூப், லேன்ட் ரேவர் ரேஞ்ச் ஸ்போர்ட், பிஎம்டபிள்யு ஐ8 எலக்ட்ரிக், டொயாட்டோ லான்ட் குரூய்சர், மிட்சுபிஷி பஜேரோ, பிஎம்டபிள்யு 6, ஹுண்டாய் சான்ட்ரோ, க்ரீட்டா ஆகிய கார்கள் இருக்கிறதாம். இப்போது புதிதாக ரோல்ஸ் ராய்ஸ் காரும் இணைந்துள்ளது.
ஹிருத்திக் ரோஷன், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட ஒரு சிலர் மட்டுமே பாலிவுட்டில் ரோல்ஸ் ராய்ஸ் காரை வைத்திருக்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!